நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூருக்கு சென்றிருந்தார்.
கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியையும் அவரது உதவியாளரையும் அங்கிருந்த நபர் ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த அந்த நபர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக விஜய் சேதுபதி பேசியதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் விஜய்சேதுபதி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும் பதிலுக்கு தான் விமான நிலையத்தில் அவரை தாக்கியதாகவும் பேட்டி அளித்திருந்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விஜய் சேதுபதி அவதூறாக பேசியதாக வெளியான இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. விஜய் சேதுபதி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Post a Comment