சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவி னரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று காலை 10.30 மணியளவில் கென்யாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். பின் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
உடல் பரிசோதனையின் போது சந்தேக நபர் தனது வயிற்றில் சந்தேகத்துக்கிடமான பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபரின் வயிற்றில் கொக்கெய்ன் மாத்திரைகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதன்படி சந்தேக நபரின் வயிற்றில் சுமார் 50 மாத்திரை களை மறைத்து வைத்திருந்ததுடன் அவற்றின் 6 மாத்திரைகளை விமான நிலையத்தில் வைத்து வெளியே எடுத்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபருடன் போதை மாத்திரைகளும் சுங்க போதைப்பொருள் பிரிவினரால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Post a Comment