கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்காமல் நேற்று இறுதிச் சடங்கு செய்யத் தயாரான நிலையில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் படி குறித்த சடலத்தை பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் பலாங்கொடை பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ கிராம உத்தியோ கஸ்தர் பிரிவைச் சேர்ந்த 75 வயதான அபிதுல் ஹமிடுக்கு பலாங்கொடையில் உள்ள தனியார் வைத்திய சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனை யின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 29 ஆம் திகதி காலை அவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சுகாதாரத்துறைக்கோ, உறவினர்களுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் வழங்கவில்லை.
குறித்த சடலத்தை தமது மத கிரிகைக்கு ஏற்ப இறுதி்ச் சடங்கை மேற்கொள்ளத் தயாரான நிலையில் பிரதேசவாசிகள் தெஹிகஸ்தலாவ பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவித் துள்ளனர்.
பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகஸ்தர் பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் சடலத்தை பலாங்கொடை ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment