தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம் - Yarl Voice தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம் - Yarl Voice

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுப் பொது அமைப்புகளின் மூலம் மரநடுகையை 
ஊக்குவித்து வருகிறது. 

இதனொரு கட்டமாக, வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு 
இணங்க அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.11.2021) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் மரக்கன்றுகளை வழங்கி வைத்து அப்பகுதிகளில் மரநடுகையையும் ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை 2014ஆம் ஆண்டு வடமாகாண மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தியது. 

இதையடுத்து ஆண்டு தோறும் இம்மாதத்தில் தமிழ் மக்கள் மரநடுகையை உணர்வுபூர்வமாக மேற்கொண்டு வருவது 
குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post