புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் ஏன் திடீர் என அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் ஏன் திடீர் என அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice

புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் ஏன் திடீர் என அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? ஐக்கிய மக்கள் சக்தி



நாட்டின் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு ஏதாவது பாதுகாப்புஅச்சுறுத்தலை  எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் நாடாளுமன்றத்திற்கு வந்தவேளை என்னை பல இடங்களில் சோதனையிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் திடீர் என பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என  அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை குழப்புவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post