தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இன்று தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி, அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
விக்னேஷ் சிவன் நயன்தாராவை அணைத்து வாழ்த்துகளை சொல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மணி. தங்கமே.. என் எல்லாமே” என்று காதலுடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தின் போதிலிருந்து காதலித்து வருகிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. தற்போது அட்லீ – ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார். அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
Post a Comment