மலையக சிறுவர் இல்லத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கிய தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் - Yarl Voice மலையக சிறுவர் இல்லத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கிய தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் - Yarl Voice

மலையக சிறுவர் இல்லத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கிய தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம்



பதுளை மாவட்டத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியினை யாழ்.தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியுள்ளார்.

ஊவா மாகாணத்தின் பதுளையில் பெண்பிள்ளைகளுக்கான மலையக சிறுவர் இல்லம் தற்காலிக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சிறுவர் இல்லத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் மலையக சிறுவர் இல்ல நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சிறுவர் இல்ல கட்டிட பணிக்கு ஒரு தொகை உதவி செய்வதாக சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பதுளை மலையக சிறுவர் இல்ல கட்டிட அமைப்பு பணிகளை நேரடியாக சென்று பாரவையிட்ட மோகனதாஸ் சுவாமிகள் அதன் பின் இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகளோடு கலந்துரையாடியதோடு
தான் வாக்குறுதியளித்தபடி சுமார் பத்து லட்சம் ரூபா நிதியினை சிறுவர் இல்ல நிர்வாகத்தினரிடம் கையளித்தார். இதன்போது சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொண்டர்களும் சமூகமளித்திருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post