13 ஆம் திருத்தம் எமக்கான அரசியல் தீர்வுமல்ல! வாக்களித்த மக்களின் கோரிக்கையுமல்ல! வடகிழக்கு சிவில் சமூகங்கள் சுட்டிகாட்டு - Yarl Voice 13 ஆம் திருத்தம் எமக்கான அரசியல் தீர்வுமல்ல! வாக்களித்த மக்களின் கோரிக்கையுமல்ல! வடகிழக்கு சிவில் சமூகங்கள் சுட்டிகாட்டு - Yarl Voice

13 ஆம் திருத்தம் எமக்கான அரசியல் தீர்வுமல்ல! வாக்களித்த மக்களின் கோரிக்கையுமல்ல! வடகிழக்கு சிவில் சமூகங்கள் சுட்டிகாட்டு



வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

அண்மைக்காலமாக 13 ஆம் திருத்தத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய  அரசிடம்  கூட்டாகக் கோரிக்கை வைக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழ்ப் பரப்பில் (வடக்கு கிழக்கில்) செயற்படும் சில  கட்சிகள்இ மேலும் சில கட்சிகளையும் இணைத்துக்  கொண்டுஇ கூட்டங்களை ஏற்பாடு செய்தமையை  நாம் ஊடகங்களுக்கூடாக அறிந்து கொண்டோம்.

இந்த முயற்சியில் கலந்து கொண்டஇ வடக்கு கிழக்கைத் தளமாகக் கொண்ட கட்சிகள் அனைத்தும்இ தமது கொள்கை விஞ்ஞாபனங்களைத் தாயகம்-தேசியம்-சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலேயே உருவாக்கி மக்கள் முன் வைத்து வந்தார்கள். அவ்விஞ்ஞாபனங்களுக்கே பல தேர்தல்களில் மக்கள் வாக்களித்திருந்தனர். எனினும்இ இவற்றிற்கு முரணாகஇ 13 ஆம் திருத்தம் தொடர்பில் இவர்கள் கூட்டாக முன்வைக்க விழையும்  கோரிக்கைகள் தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்களை  குறித்த அரசியல் கட்சிகளின் கவனத்திற்கும்இ தமிழ்ப்  பொது மக்களின் புரிதலுக்காகவும் முன்வைக்க விரும்புகின்றோம்.

1. 13 ஆம் திருத்தமானது ஒற்றையாட்சி எனும் அரசியல் வரையறைக்குள் உருவாக்கப்பட்டுள்ளஇ அடிப்படையில் தெளிவற்றதும் முரண்பாடுகள் கொண்டதுமான ஓர் அரசியல் ஏற்பாடாகும்.

2. குறித்த 13 ஆம் திருத்தமானது “முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்” போது கூட அது நாம் எதிர்நோக்கும் நாளாந்த ஒடுக்குமுறைகளையும்இஇ எம்மைத் தேசமாகத் திரளாது தடுத்துஇ உருக்குலைய வைக்கும் செயற்பாடுகளையும் தடுக்க முடியாததுமான ஒரு ஏற்பாடு என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாக “அரச காணிகள்” என்ற விடயப்பரப்பில் மாகாண அரசாங்கத்திற்கு உண்மையான அதிகாரம் இல்லை. மேலும் 13ஆம் திருத்ததில் வழங்கப் பட்டதெனக் கூறப்படும் பொலிஸ் அதிகாரம் தொடர்பான மிகக் குறைந்த ஏற்பாடுகள் கூட நடைமுறைக்கு வரவில்லை. வனத் திணைக்களம்இ தொல்லியல் திணைக்களம் போன்றவற்றின் செயற்பாடுகள் மீதும் அதிகாரமில்லை. சுயமாக நிதி தரும் வரி மூலங்கள் அற்ப சொற்பமானவை. மாகாண பொதுச்சேவையானது மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களினதோ அமைச்சர்கள் வாரியத்தினரதோ கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக அவை மத்தியால் நியமிக்கப்படும் ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இணந்த வடக்குக் கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் இவற்றை வெளிப் படுத்தித்இ தனி நாட்டைப் பிரகடனம் செய்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரியதனூடாகவும்இ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கும்இ இந்திய அரசியற் தலைவர்களுக்குமிடையிலான கடிதப் பரிமாற்றங்களின் மூலமாகவும்இ கடந்த 34 வருடகால மாகாண சபை அனுபவங்கள்இ நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாகவும்இ 13வது திருத்தம் இனப் பிரச்சனை விடையத்தில்இ ஒரு தோல்வியடைந்த ஏற்பாடகவே உள்ளமையை அறியக் கூடியதாகவுள்ளது.  
 
3. 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் எமது அரசியல் தீர்வு நிலைப்பாடானால் அது ஒற்றையாட்சி வரையறையை ஏற்றதாகி விடும். இது வரை காலமும்இ இத் தமிழ்க் கட்சிகளும்இ மக்கள் அமைப்புக்களும்இ அரசியலமைப்புத் திருத்தம்இ இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றிற்காக பகிரங்க வெளியில் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் தாயகம்-தேசியம்-சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுஇ சமஷ்டி முறைமையை நோக்கியவையாகவே இருக்கின்றன. எனவே  13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதானது எமது சமகாலப் பிரச்சினைகளுக்குப் பகுதியளவில் தானும் தீர்வைத் தரும் என்ற  தோரணையில் எடுக்கப்படும் திடீர் அரசியல் முன்னெடுப்புக்களை  நாம்  நேர்மையற்றவையாக கணிக்கின்றோம். இதற்குப் பதிலாகஇ தாயகம்-தேசியம்-சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டஇ சமஷ்டி முறைமையை கோருகின்ற முன் முயற்சிகளையேஇ மக்கள் இது வரை வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் எமது பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.

4. வெளித்தரப்பு ஒன்றிடம் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நிலைப்பாடு ஒன்றைக் வெளிப்படுத்தக் கோரும் போதுஇ  நாம் எது எமது மக்களுக்கு உண்மையான தீர்வைக் கொண்டு வரும் என கருதுகின்றோமோ அதனை முன்வைக்க வேண்டுமேயன்றிஇ நாம் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக எதனை முன்வைப்பதனைக் குறித்த வெளித்தரப்பு விரும்பும்  என்ற ஊகத்தின் அடிப்படையில் நாம் எமது நிலைப்பாட்டை முன்வைக்கக் கூடாது. தத்தமது பூகோள அரசியல் நலன்களைப் பேண விரும்பும் தரப்புக்களிடம்இ தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும்இ அரசியல் அபிலாசைகளையும்இ குறித்த வெளித்தரப்பினரது நலன்களையும் அர்த்த பூர்வமாக இணைத்து மேற்கொள்ளும் ஏற்பாடுகளே நிலை பேறானவையாக அமையும் என்பதனையே எமது பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும். மாறாகஇ வெளித்தரப்புக்களின் நலன்களை மட்டும் பிரதிபலிப்பது எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் வழங்கிய தேர்தல் ஆணையாக  ஒரு போதும் அமையாது. இது இராஜ தந்திரமும் அல்ல.

5. இந்தியாவுக்குப் 13ஆம் திருத்தத்தின் முக்கியத்துவம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கைகளில் தமக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளின் வாயிலாகவே கிடைக்கிறது. அது அவர்களுக்கு முக்கியமானால் அவர்கள் அதற்கான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கட்டும். அதற்காக இந்தியா எமக்கு தீர்வாக வரமாட்டாத 13ஆம் திருத்தத்தை நாம் எமது அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சுயநலம் மிக்கது. அதனை ஏற்று எமது அரசியற் பிரதிநிதிகள் செயற்படுவதும் அறத்தின் பாற்பட்டதல்ல.

6. மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதற்கு அரசியல் அமைப்பில்  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிப்பது இலங்கை அரசாங்கத்தின் தெரிவுக்குரிய விடயம் அல்ல. அது அவர்களது அரசியலமைப்புக்  கடமையாகும். மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமென்றால் அதற்கு தடையாகவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை நீக்கி பழைய ஏற்பாடுகளின் கீழ் அத்தேர்தல்களை நடாத்த சம்பந்தப்பட்ட கட்சிகள் கூட்டாகவோஇ தனிநபர் சட்ட மூலமாகவோ பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வரலாம். 2018 இல் வட மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் புதிதாக தேர்தல்கள் நடத்துவதனை தடுப்பதற்காக  முந்தைய அரசாங்கம் அவசரம் அவசரமாக தேர்தல் திருத்தச் சட்டங் கொண்டு வந்த போது அது தேர்தலினைத்  தாமதப்படுத்தும் என  அறிந்தே சில தமிழ் கட்சிகள் அச் சட்டத்திற்கு ஆதரவளித்தன என்பதனை  நாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

7. மாகாண சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் எமது மக்கள் நோக்கும் அன்றாட பிரச்சனைகளுக்குஇ அதன் சட்ட வரையறைகளுக்குள் நின்று தீர்வு காண முடியாது. ஆனால் மக்கள் தரும் ஆணையின் பலத்தைக் கொண்டு மாகாண சபையின் இயலுமைக்குமப்பால்இ அது உருவாக்கித் தந்துள்ள அரசியல் வெளியைப் பயன்படுத்தி எமக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கலாம்இ முட்டுக்கட்டை போடலாம்இ அதனையும் தாண்டி சட்டம் தராத வெளியை மக்கள் ஆதரவுடன் உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கி மக்கள் பணியாற்ற முயற்சிக்கலாம். இந்தத் தேவைகளுக்காக மாகாண சபைகளுக்கான  தேர்தல்களைக் கோரி அழுத்தம் வழங்கலாம். ஆனால் அத்தகைய திட்டமோ அதற்கான அரசியல் ஆளுமையோ தூர நோக்கோ இல்லாமல் வெறுமனே தேர்தல்களை மட்டும் தமது பதவி ஆசைகளுக்காக அரசியற் கட்சிகள்  கோருவதில் பயனில்லை. மேலும் சென்ற முறை போலன்றி வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியை  அரசியல் ஒழுக்கமின்றியும் வினைத்திறன் இன்றியும் உட்சண்டைகளிலும் அரசியற் குரோதங்களை வெளிப்படுத்துவதிலும் வீணடித்துஇ மாகாண சபை ‘முறைமையின்’ தோல்வியைஇ தனிநபர் வினைத்திறன் தோல்வியாகப் பொருள்கோடல் செய்யத் துணை நிற்காதுஇ அனுபவ ரீதியான படிப்பினைகளை அரசியற் செய்திகளாக மாற்றுவது குறித்து எமது அரசியற் பிரதிநிதிகள் சிந்திக்கலாம்.

8. கடந்த காலங்களில்இ பல்வேறு தேர்தல்களூடாகவும்இ பல தரப்பினர்களினாலும் முன்னெடுக்கப் பட்ட மக்களுனான கலந்தாய்வுச் செயன்முறைகளினூடாகவும்இ ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டஇ சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஏற்பாடுகளையே வடக்குஇ கிழக்கு வாழ் மக்கள் மீள மீளக் கோரி வருகிறார்கள் என்பதனையும்இ தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்திற் கொள்ள வேண்டும். எனவே எத்தகைய தீர்வை முன்வப்பது என்பது உங்கள் முன் உள்ள தெரிவு அல்ல. நீங்கள் மக்கள் முன் வைத்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் மக்கள் ஏற்கனவே வழங்கிய ஆணையின் பிரகாரம்இ ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டஇ தாயகம்-தேசியம்-சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பது உங்களின் சனநாயகக் கடப்பாடு என்பதை மீள வலியுறுத்த விரும்புகிறோம்.  

வடக்குக் கிழக்கில் மக்கள் நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்இ வெகு சன அமைப்புக்களைச் சேர்ந்த நாம்இ எமது அரசியற் பிரதிநிதிகள் மேற்படி விடயங்களைக் கவனத்திற் கொண்டு இதய சுத்தியுடனும் நேர்மையுடனும்  மக்கள் ஆணையைச் செயற்படுத்த வேண்டும்  என வேண்டி நிற்கின்றோம்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம்
P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம்
தமிழ் மக்களாட்சிச் செயற்குழு
நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள்இ வடக்கு-கிழக்கு
தமிழர் மரபுரிமைப் பேரவை
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்இ யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
அகம் மனிதாபிமான  வள  நிலையம்இகிழக்க மாகாணம்.
புழுதி- சமூக உரிமைகளுக்கான அமைப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post