துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்விளான் மகா வித்தியாலய மாணவர்கள் 15 பேருக்கே துவிச்சக்கர வண்டி மற்றும் புத்தகபை என்பன வழங்கி வைக்கப்பட்டன, தேவையுடைய மாணவர்களுக்காக நல்லூர் ரோட்டரி கழகத்தால் வருடம்தோறும் டிசெம்பர் மாதம் இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இம்முறை துணுக்காய் கல்வி வலயத்தில் மேற்கொள்ள பட்டது இதன்போது 15 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் புத்தக பை என்பன மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நல்லூர் ரோட்டரிக்கழக தலைவர் கபிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு. உமாசங்கர் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். விக்னரூபன்.
இச செயற்திட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்து வரும் மனித நேயர் த.ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் வித்தியாலய அதிபர் நல்லூர் ரோட்டரி கழக உறுப்பினர்கள்.ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment