இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும் கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியையடுத்து வடபிராந்திய சாலைகளில் இவ்வாறு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தினை 10 தவணைகளில் மீள வழங்குவதாக தலைமையகம் உத்தரவாதமளித்துள்ளது.
எனினும் வாகன உதிரிபாகங்களின் நெருக்கடி நீடிக்கும் நிலையில் சாலைகளில் உள்ள வைப்புப் பணத்தினை தலைமையகத்துக்கு மாற்றவேண்டாம் என வடபிராந்திய இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Post a Comment