காதலுக்கு புது இலக்கணம் வகுத்த… காதலுக்கு மரியாதை... ரிலீஸாகி 24 வருஷமாச்சு - Yarl Voice காதலுக்கு புது இலக்கணம் வகுத்த… காதலுக்கு மரியாதை... ரிலீஸாகி 24 வருஷமாச்சு - Yarl Voice

காதலுக்கு புது இலக்கணம் வகுத்த… காதலுக்கு மரியாதை... ரிலீஸாகி 24 வருஷமாச்சு



விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை.

1997ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம்  24ம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
காதலுக்கு மரியாதை

பாசில் இயக்கத்தில், மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம் அனியத்திப் புறாவு. இப்படத்தை தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் பாசிலே இயக்கினார். 

இப்படத்தில், விஜய், ஷாலினி, ராதாரவி, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காதல் தியாகம்
1997ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பெற்றோர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் உயிருக்கு மேலாக நினைத்த காதலை பெற்றோருக்காக தியாகம் செய்கின்றனர் இளம் ஜோடிகள் அவர்களின் தியாகத்தை ஏற்று, அவர்களை இணைத்து வைக்கின்றனர் பெற்றோர்.

2022ஐ வரவேற்க தயாராகும் தளபதி விஜய் கேலண்டர்... ட்ரெண்டாக்கிவரும் ரசிகர்கள்! 2022ஐ வரவேற்க தயாராகும் தளபதி விஜய் கேலண்டர்... ட்ரெண்டாக்கிவரும் ரசிகர்கள்!

விஜய்க்கு திருப்புமுனை
கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம், பெண்ணை கேலி செய்யும் காட்சி என எதுவும், இப்படத்தில் துளியும் இல்லை. குடும்பத்துடன் மக்கள் திரண்டு வந்து படத்திற்கு, வெற்றி வாகை சூடி மகிழ்ந்தனர். 

சுமாராக ஓடக்கூடிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய்க்கு இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இன்று வரை விஜய்யை கொண்டாட இப்படமும் ஒருமுக்கிய காரணம் என்று கூறலாம்.

விஜய் தலைமுடிக்கு என்னாச்சு...சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பிய ரசிகர்கள் விஜய் தலைமுடிக்கு என்னாச்சு...சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பிய ரசிகர்கள்
கதை பேசிய பாடல்
இப்படத்தின் மாபெரும் வசூலுக்கு மற்றொரு காரணமாக இருந்தது இளையராஜாவின்இசை... இது சங்கீதா திருநாளோ... ஒரு பட்டாம்பூச்சி, என்னை தாலாட்ட வருவாளோ , ஆனந்த குயிலின் பாட்டு என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை பேசியது.

. விஜய்யின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த இந்த படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #24 Years Of Kadhaluku Mariyadhai என்ற ஹாஸ்ட்ராக்கை வைரலாக்கி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post