வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு - Yarl Voice வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு - Yarl Voice

வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு



வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பஸ் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை பொலிஸாராலும், சம்பந்தப்பட்ட சுற்றிவளைப்புப் பிரிவினராலும் மேற்படி பஸ்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரான நிலான் மிராண்டா தெரிவித்தார்.

மேற்படி பஸ்கள் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப் பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post