வங்கதேச ஆற்றில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து - 32 பேர் உயிரிழப்பு - Yarl Voice வங்கதேச ஆற்றில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து - 32 பேர் உயிரிழப்பு - Yarl Voice

வங்கதேச ஆற்றில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து - 32 பேர் உயிரிழப்பு



வங்கதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பற்றி எரிந்ததில்  அதில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டாகாவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜகாகாதி பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

எம்வி அபிஜான் 10 என பெயரிடப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட படகு 100க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.

நடு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் தீப்பற்றி படகு முழுவதும் பரவியுள்ளது. 

அப்போது தீயில் இருந்து தப்பிக்க பலர் ஆற்றில் குதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 32 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் ஜகாகாதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post