யாழ் - காரைநகரில் 365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது...! - Yarl Voice யாழ் - காரைநகரில் 365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது...! - Yarl Voice

யாழ் - காரைநகரில் 365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது...!



நேற்றிரவு (23) 11.30 மணியளவில், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இருவரும் காரைநகர் கடற்பகுதியால் கஞ்சாவினை கடத்தி வந்தவேளை கடமையில் இருந்த கடற்படையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 365 கிலோ எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் காரைநகரை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post