பளு தூக்கலில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த ஷெனுகி! - Yarl Voice பளு தூக்கலில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த ஷெனுகி! - Yarl Voice

பளு தூக்கலில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த ஷெனுகி!



துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஷெனுகி திஷாலயா  47 கிலோ எடைப்பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

டெட் லிஃப்ட், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஸ்குவாட் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன் ஒட்டுமொத்த தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

இக்குறிப்பிடத்தக்க வெற்றியின் மூலம், அவர் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார்.

ஆசிய பளு தூக்கல் கூட்டமைப்பு, துருக்கிய பளு தூக்கல் கூட்டமைப்புடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது.

19 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 24-30 வரை நடைபெறுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post