இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம் - ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு - Yarl Voice இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம் - ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு - Yarl Voice

இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம் - ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு



ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமே, கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியின்  பூஸ்டர் டோஸ்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், முகக்கவசம் அணிவதும் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,  “கொரோனா பெருந்தொற்று நம்மிடையே பல வருடங்கள் இருக்க போகின்றது. சாதாரண காய்ச்சல் மற்றும் சளிக்கு எடுத்துக் கொள்ளும் தடுப்பூசிகளை போன்றே கொரோனா தடுப்பூசியையும் கருத வேண்டும்.

வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை ஆண்டுக்கு ஒருமுறையா அல்லது இருமுறை போட வேண்டுமா என்பதை கொரோனா வைரஸ் குறித்த தரவுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்புக்கான  தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தான் பூஸ்டர் டோஸ் குறித்து முடிவெடுக்க வேண்டும், அரசியல்வாதிகள் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளுக்கான இடைவெளியை 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக குறைத்து நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post