விமானத்தில் வைத்து, 80 வயதான நபர் ஒருவரை, பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே, உலக நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இன்று வரையில், முகக்கவசத்தின் கட்டாயத்தை உணர்ந்து, மக்கள் தொடர்ந்து அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில், முகக்கவசம் இல்லாமல், சுற்றித் திரிபவர்களை சற்று வினோதமாக தான் பார்க்கவும் செய்தார்கள். அது மட்டுமில்லாமல், முகக்கவசம் இல்லாமல் இருப்பவர்களின் அருகில் செல்லவும் தயக்கம் கொண்டனர். அந்த அளவுக்கு கடந்த இரு ஆண்டுகளாக முகக்கவசம், மக்களின் தினசரி தேவையாக மாறியுள்ளது.
விமானத்தில் தகராறு
இதனிடையே, முகக்கவசம் தொடர்பாக தான் ஓடிய விமானத்திற்குள் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவர் பயணம் செய்துள்ளார். உணவு அருந்துவதற்காக வேண்டி, முகக்கவசத்தை கழற்றி, உணவு அருந்திக் கொண்டு இருந்துள்ளார் அவர்.
முகக்கவசத்தை அணியுங்கள்
அப்போது, விமானத்தில் இருந்த Patricia Cornwall என்ற பெண்மணி, அந்த முதியவரிடம் முகக்கவசத்தை அணியுங்கள் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த பெண்மணியே முகக்கவசத்தை சரிவர அணியவில்லை. தொடர்ந்து, அந்த நபரிடம் பேசும் Petricia, முகக்கவசத்தை அணியக் கூறி, திரும்ப திரும்ப சொல்கிறார்.
ஓங்கி அறைந்த பெண்மணி
அந்த முதியவரும், நீ முதலில் அமைதியாக பேசு எனக்கூற, சக பயணிகளும் பெண்ணை தனது இருக்கையில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தினார். ஆனால், அதனைக் கண்டு கொள்ளாத பெண்மணி, கோபத்தில் முதியவரின் முகத்தில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த முதியவர், 'நீ ஜெயிலுக்கு போவாய்' எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, அந்த பெண் சில வசைச் சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அட்லாண்டா விமான நிலையத்தில், அந்த விமானம் தரை இறங்கியுள்ளது. அப்போது, அடிதடியில் ஈடுபட்ட அந்த பெண்மணியை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கிருந்தவர்களின் வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸ் அதிகாரிகள், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
உடன் நிற்க மாட்டோம்
மேலும், விமானத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக, டெல்டா ஏர் லைன்ஸ் தரப்பில், 'இது போன்ற சூழ்நிலை என்பது, எங்களின் பயணிகளுக்கு மிகவும் அரிதான ஒன்று. இது போன்ற மோசமான நடத்தைக்கு என்றைக்கும், நாங்கள் உடன் நிற்க மாட்டோம்' என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
உணவருந்த வேண்டி, முகக் கவசத்தை கழற்றிய முதியவரை தேவையே இல்லாமல், பெண்மணி ஒருவர் தவறாக வசைபாடி, அவரை உதைக்கவும் செய்த வீடியோ, இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment