ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. தற்பொழுது எனின் வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காணப்படுகின்றன.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது
Post a Comment