ஒமிக்ரோன் பரவல் காரணமாக பல சர்வதேச விமானசேவைகள் நிறுத்தப்பட்டால் கிறிஸ்மஸ் பயணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் பெருமளவு விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விமான பணியாளர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாலும்;, தனிமைப்படுத்தப்பட்டதாலும் விமானசேவைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கு செல்லவிருந்த அமெரிக்கவிலிருந்து புறப்படவிருந்த 600 விமானங்கள் தங்கள் சேவையை இடைநிறுத்தியுள்ளன.
இன்று700 விமானங்கள் தங்கள் சேவையை இடைநிறுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்டா யுனைட்டட் எயர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் எயர்லைன்ஸ் ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எங்கள் விமான பணியாளர்கள் மற்றும் விமானசேவையுடன் தொடர்புபட்டவர்களை நேரடியாக பாதித்துள்ளது என யுனைட்டட் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment