கரீனா கபூர் மகன் பெயர் என்ன? பள்ளி தேர்வில் கேள்வி.. கொதித்து போய் அரசு எடுத்த ஆக்சன் - Yarl Voice கரீனா கபூர் மகன் பெயர் என்ன? பள்ளி தேர்வில் கேள்வி.. கொதித்து போய் அரசு எடுத்த ஆக்சன் - Yarl Voice

கரீனா கபூர் மகன் பெயர் என்ன? பள்ளி தேர்வில் கேள்வி.. கொதித்து போய் அரசு எடுத்த ஆக்சன்



பாலிவுட் நடிகர் சயீஃப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் தொடர்பான கேள்வி ஒன்றைத் தேர்வில் கேட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில், ஒரு துளி கூட சம்மந்தமில்லாமல் கேள்விகள் இடம்பெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் தொடர்பான கேள்விகளும், சர்ச்சையை கிளப்பும் கேள்விகள் என இவற்றின் விதங்கள் ஏராளம். இப்படி கேட்கப்படும் கேள்விகளால் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல், பொது மக்களும் கடும் கோபம் அடைகின்றனர்.

அந்த வகையில், அப்படி ஒரு கேள்வி தான், தற்போது தனியார் பள்ளி ஒன்றின் தேர்வில் கேட்கப்பட்டு எரிச்சலை கிளப்பியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், காண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது அகாடமி ஹைட்ஸ் பப்ளிக் பள்ளி. இங்குள்ள மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆறாம் வகுப்பு மாணவர்களின் கேள்வித் தாளில், நாட்டு நடப்புகள் என்னும் பிரிவின் கீழ், பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதியின் மகனின் முழு பெயர் என்ன என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

சர்ச்சையான கேள்வி

வட கொரியாவின் அதிபர் யார், 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை எந்த அணி வென்றது என்ற கேள்விகளும் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தது. சயீஃப் அலிகான் - கரீனா மகனின் பெயர் தொடர்பான  கேள்வியைக் கண்ட பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியும், கோபமும் கொண்டனர். உடனடியாக, அப்பள்ளியின் பெற்றோர்கள் சங்கம் சார்பாக, அப்பள்ளி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

சம்மந்தம் இல்லாத கேள்வி

இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட பெற்றோர்கள் சங்கத் தலைவர் அனிஷ், 'ஒரு பள்ளி நிர்வாகம் எப்படி இது போன்ற தீவிரம் இல்லாத கேள்விகளைக் கேட்க முடியும்?. வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்காமல், பாலிவுட் பிரபலங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு வைத்துள்ளனர்' என விமர்சனம் செய்துள்ளார். இந்த சங்கத்தினர் பலமுறை பள்ளி நிர்வாகத்தினை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

நடவடிக்கை

இந்த சம்பவம் பற்றிப் பேசிய மாவட்ட கல்வித்துறை அதிகாரி சஞ்சீவ், 'இந்த கேள்விக்கான காரணம் பற்றி, பள்ளி நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம். அவர்களது பதிலின் அடிப்படையில் நடவடிக்கையை எடுப்போம். அதே பள்ளியின் மற்ற வகுப்புகளின் வினா தாள்களையும் சோதித்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post