இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி இருந்த காலம் சர்ச்சைக்கும், பிரச்சினைக்கும் குறையே இல்லை.
அவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தான் ஒவ்வொரு வீரரும் அவரை பற்றி வாய் திறந்து வருகின்றனர்.
சமீபத்தில் ரவி சாஸ்த்ரி குறித்து அஸ்வின் அளித்த பேட்டி சர்ச்சையானது. அதற்கு ரவி சாஸ்த்ரி தற்போது பதிலடி தந்துள்ளார்.
2018-19 ஆம் ஆண்டில் தமக்கு காயம் ஏற்பட்ட போது சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்று குறிப்பிட்ட அஸ்வின், அப்போது ரவி சாஸ்த்ரி கூறிய கருத்து தம்மை மிகவும் மனதளவில் காயப்படுத்தியதாக தெரிவித்தார்.
குல்திப் தான் இனி சிறந்த பந்துவீச்சாளர், அஸ்வினின் காலம் முடிந்துவிட்டது என்று ரவி சாஸ்த்ரி கூறியது என்னை பஸ்க்கு கீழே தள்ளி ஏற்றியது போல் இருந்ததாக கூறினார்.
அஸ்வினின் இந்த பேச்சுக்கு தற்போது ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார். அதில் தனது பேச்சு அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
பயிற்சியாளராக எனது பொறுப்பு அனைவருக்கும் பிடித்தார் போல் பேசுவது அல்ல. அவர்களின் ரொட்டியில் வெண்ணெய் தடவி விடுவது என் பணி அல்ல.
பயிற்சியாளர் ஒருவரை அழைத்து சவால் விட்டால், இனி நான் பயிற்சிக்கே செல்ல மாட்டேன் என்று வீட்டில் படுத்து அழுவது ஒரு ரகம்.
ஆனால் என்னை போன்றோர் அவர்கள் விட்ட சவாலை நிறைவேற்றி காட்டுவேன் என்று உழைப்பது ஒரு ரகம். 2018ஆம் ஆண்டில் அஸ்வினின் உடல் தகுதி சரியாக இல்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
குல்தீப் அப்போது அஸ்வினை விட சிறப்பாக பந்துவீசினார். அதனால் தான் நான் அப்படி சொன்னேன். பேருந்துக்கு அடியில் அஸ்வினை தள்ளிவிட்டேன் தான். ஆனால் பேருந்து ஓட்டுனரை மூன்று அடிக்கு முன்னாலே நிறுத்த சொல்லிவிட்டேன்.
இதனால் அஸ்வின் நொறுங்க மாட்டார். நான் அப்படி சொல்லியதால் தான் அஸ்வின் இன்று தனது உடல் தகுதியை மேம்படுத்தி இன்று உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளராக உள்ளார்.
நீங்களே 3 ஆண்டுக்கு முன்னால் இருந்த அஸ்வினையும் இப்போதுள்ள அஸ்வினையும் பாருங்கள். உண்மையை சொல்லி அவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதே எனது பணி என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.
Post a Comment