மீன்பிடித்து விளையாடிய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு! - Yarl Voice மீன்பிடித்து விளையாடிய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு! - Yarl Voice

மீன்பிடித்து விளையாடிய சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு!



தோட்டக் கிணற்றில் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

 நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியில் இன்று(19) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நியாந்தன் தித்திஸ்குமார் (வயது- 08) என்ற சிறுவனை உயிரிழந்துள்ளார்.


 வீட்டுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் சிறுவன் பட்டம் ஏற்றி கட்டிவிட்டு தோட்டக் கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்து விளையாடியுள்ளார். அச்சமயம் சிறுவன் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அச்சிறுவனுடன் கூட இருந்த  சிறுமி ஒருவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் சிறுவனை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூறு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post