பால் மா இறக்குமதிக்குத் தடையாக உள்ள டொலர் தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு இன்று (14) கடிதம் அனுப்பவுள்ளதாக பால் மா இறக்குமதி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாவிடின் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் தட்டுப்பாடு தொடரும் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 50 வீதமான பால் மாவை ஓடர் மூலம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை திருத்தியமைக்க வேண்டுமென பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.
Post a Comment