உலகில் எரிபொருள் விலையை அதிகரிக்காத ஒரே நாடு இலங்கை மாத்திரமே என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் எண்ணெய் நெருக்கடி ஏற்படுமாயின் நாட்டு மக்கள் சார்பாக அவர் எடுக்கும் தீர்மானம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் பாராளுமன்ற உறுப்பினரான ஹேஷா விதானகே இன்று கேள்வி எழுப்பினார்.
எதிர்காலத்தில் இலங்கையர்கள் எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும், அமைச்சர் கம்மன்பிலவால் நிராகரிக்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் பயனுள்ளதாய் கருதப்படும் என ஹேஷா விதானகே இதன் போது தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த ஆறு மாதங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளாததால் கடந்த ஆறு மாதங்களில் 70 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வரிகளை ஓரளவு குறைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment