சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரம் - Yarl Voice சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரம் - Yarl Voice

சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணியின் ஆதிபராசக்தி அவதாரம்




சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்களிடையே மிக பிரபலம்.   லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்கேற்றவர் அன்னபூரணி.   அவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும், இன்னொரு பெண்ணின் கணவருடன் தான் நிரந்தரமாக வாழ வேண்டும்  இதற்கு ஒரு தீர்வு கோரி அந்த நிகழ்ச்சிக்கு அவராகவே காதலனுடன் வந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவரின் கணவர் எதிரே அமர்ந்திருந்தார்.  அன்னபூரணியின் காதலனின் மனைவி எதிரே கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.
அந்த  அன்னபூரணி இன்றைக்கு ஆன்மிக அவதாரம் எடுத்திருக்கிறார்.  அதுவும்  தன்னைத் தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்கிறார். அவரது காலில் விழுந்து மக்களும் ஆசி வாங்கிச் செல்கிறார்கள். அன்னபூரணியும் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

அன்னபூரணியின் அருளாசிகள் ஒரு பக்கம் வைரலாகி வர, சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்ன பூரணியின் நிகழ்ச்சியும் வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னபூரணி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் எல்லாம் வல்ல சக்தியான நம் அம்மா அருளாசி கொடுக்க இருக்கிறார்.  

ஜனவரி 1ஆம் தேதி சனிக்கிழமை அம்மாவின் திவ்யதரிசனம் அனைத்து மக்களுக்கும் நடைபெற இருக்கிறது.  தரிசனத்திற்கு அனுமதி இலவசம் என்றெல்லாம் அவரது பக்தர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று சொல்லியிருக்கிறார் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்.

  அவர் மேலும்,   ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை இப்படி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்.சொன்னதெல்லாம் உண்மைதான்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post