இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளியான இளைஞர் ஒருவருக்கு அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு தொகை நிதியினை சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வழங்கி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வசிக்கின்ற மாற்றுத்திறனாளியான இளைஞர் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார். இறுதி யுத்தத்தில் தந்தையினை இழந்த குறித்த இளைஞர் தாயின் பாராமரிப்பிலேயே மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞரின் சிறுநீரக சிகிச்சைகளுக்கு உதவும் நோக்கில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் குறித்த இளைஞரின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று ஒரு தொகை நிதியினை வழங்கி வைத்துள்ளார். மாற்றுத்திறனாளியான குறித்த இளைஞர் வீட்டு அலங்கார பொருட்களை கைவினைப் பொருட்களை செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment