மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா ஆண் நண்பர் ஒருவருடன் "டேட் நைட்" மேற்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர்.
விளையாட்டு துறையின் பக்கம் வராத சாரா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கரை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்
.23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவர் தனது அன்றாட வாழ்வில் எந்தவொரு விஷயத்தை செய்தாலும், அதனை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரை ட்ரீம் கேர்ளாக கருதி, ஸ்டோரிகளை பார்ப்பதற்கென்றே பல ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சாரா டெண்டுல்கர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் ஆண் நண்பர் ஒருவருடன் இரவு நேரத்தில் டேட்டிங் செய்துள்ளார். அவரின் கையை பிடித்துக்கொண்டு சாரா இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு, ‘நைட் டேட்டிங்' என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment