நித்திலம் கலையகத்தினால் உருவாக்கப்பட்ட தூவானம் திரைப்படத்தின் பாடல்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வைத்தியர் சிவன்சுதனின் தயாரிப்பில் உருவான குறித்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களை உள்ளடக்கி படமாக்கப்பப்டுள்ளது.
திரைப்படத்திற்கான இசையினை ஈழத்தின் பிரபல இசை அமைப்பாளர் இசைவாணர் கண்ணன் மற்றும் அவரது புதல்வர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
குறித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான யாழ் இசைக் கருவியை உருவாக்கி மீண்டும் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மேலும் குறித்த இசைக்கருவியின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான பயிர்ச்சிகளையும் மேற்கொள்ள உவுள்ளதாக தெரிவித்தனர்.
நிகழ்வில் இசைவாணர் கண்ணன், கவிஞர் வேலணையூர் சுரேஷ், வைத்தியர் சிவன் சுதன், கவிஞர் புதுவை அன்பன் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் திரைப்படத்தின் உருவாக்கியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment