சமந்தா, சினேகா… விஜய் டிவி ரியாலிட்டி ஷோ-வுக்கு படையெடுக்கும் பிரபலங்கள்! - Yarl Voice சமந்தா, சினேகா… விஜய் டிவி ரியாலிட்டி ஷோ-வுக்கு படையெடுக்கும் பிரபலங்கள்! - Yarl Voice

சமந்தா, சினேகா… விஜய் டிவி ரியாலிட்டி ஷோ-வுக்கு படையெடுக்கும் பிரபலங்கள்!



வெள்ளித்திரையில் பிரபலமாக வலம் வரும் நடிகர் நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்து விடுவதால் சின்னத்திரையை நோக்கி படையெடுத்து வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதில், சிலர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மாறி மாறி தோன்றினாலும், சிலர் சின்னத்திரையிலேயே இருந்து பெரும் புகழ் அடைகின்றனர்.

அந்த வகையில் தமிழில் பல வெள்ளித்திரை பிரபலங்கள் தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாவும், நடுவர்களாகவும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விஜய் டிவியின் “கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்” நிகழ்ச்சியில் நடிகை சினேகா நடுவராக பங்கேற்க உள்ளார். ஏற்கனவே அவர் நடன போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றிருந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி தொகுத்து வழங்குகிறார்.

நடிகை சினேக
இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை நட்சத்திரம் லிசா நடிகை சினேகவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படத்தில் நடிகை கிகி, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் உள்ளனர்.

தவிர, நடிகை சினேகா நடுவராக பங்கேற்க உள்ள இந்த “கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்” நிகழ்ச்சியில், மற்றொரு நடுவராக நடிகை சமந்தா ரூத் பிரபு பங்கேற்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் திரைபிரபலங்களை நேர்காணல் செய்யும் தெலுங்கு சின்னத்திரை ஷோவில் தொகுப்பாளராக இருந்தார்.

நடிகை சமந்தா ரூத் பிரபு
கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் நடிகை வாணி போஜன், நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்த நிலையில், தற்போது இந்த சீசனில் சினேகா மற்றும் சமந்தா பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post