பேராயர் டெஸ்மன்ட் டுட்டு உலகின் எல்லா இடங்களிலும் இடம்பெறும் அநீதி குறித்து கவலை கொண்டிருந்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பேராயர் டுஸ்மண்;ட் டுட்டு எனக்கும் இன்னும் பலருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் நண்பராகவும் தார்மீக திசைகாட்டியாகவும் விளங்கினார்.
அவர் ஒரு உலகளாவிய ஆத்மா.அவர் தனது சொந்தநாட்டில் விடுதலை மற்றும் நீதிக்கான போராட்டத்தின் உறுதியான அடித்தளமாக காணப்பட்டார் ஆனால் எல்லா இடங்களிலும் நடக்கும் கரிசனை குறித்து அவர் கரிசனை கொண்டிருந்தார்.
அவர் ஒருபோதும் தனது நகைச்சுவை உணர்வையும் அவரது எதிராகளில் மனிதாபிமானத்தை கண்டறியும் தன்மையையும் இழக்கவில்லை.
நானும் மிச்செலும் அவரை மிகவும் இழக்கப்போகின்றோம் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
Post a Comment