லண்டனிலிருந்து கிளிநொச்சி சென்றவேளை காணாமல்போன பெண் சடலமாக மீட்பு - Yarl Voice லண்டனிலிருந்து கிளிநொச்சி சென்றவேளை காணாமல்போன பெண் சடலமாக மீட்பு - Yarl Voice

லண்டனிலிருந்து கிளிநொச்சி சென்றவேளை காணாமல்போன பெண் சடலமாக மீட்பு



லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல்போயிருந்த குறித்த பெண்ணின் சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக.தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை அழைத்து சென்று பொலிசார் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
3வருடங்களுக்கு முன்பாக லண்டனில் இருந்து வந்து கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந் இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கதது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post