தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்" எனும் தலைப்பில் கருத்தாய்வு நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.
இன்று(18) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
வி.எஸ்.சிவகரனின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை ஜெயபாலன்,அரசியல் ஆய்வாளர்களான போராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், நிலாந்தன், ஊடகவியலாளர் வித்தியாதரன், செல்வின் ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் அருந்தவபாலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment