நத்தார் பண்டிகையின் போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஊடான மதுபான விநியோகத்திற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் ஆணையாளரான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தன்று சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப் பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே மதுபானம் வழங்குவதற்கு கடந்த காலங் களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நத்தார் தினத்தன்று மதுபானம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும், இக்கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களோ தீர்மானமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment