நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.
அதாவது தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள் பல்வேறு இணை நோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் (விடுதலைக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல) ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது குறித்தான மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்க ஏதுவாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறு பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறுகையில், சிறை என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமுகத்தில் கலக்க தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரீக சமூகம் ஏற்கொண்ட கருத்தியல் ஆகும்.
அதிலும் குற்றமற்றவர்கள் கூட சில நேரங்களில் நீதிப்பிழையால் சிறை தண்டனை அடைந்து விடும் நேர்வுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதால் சிறைகள் ஒருபோதும் பழிவாங்கும் இடமாக இருக்க கூடாது என்பதே நியதி.
Hate Crimes: Not Criminals'' என்பது மகாத்மா காந்தியடிகளின் புகழ்பெற்ற மேற்கோள். ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது எனறார் மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர். ஒரு நாடு நாகரீகமடைந்து விட்டது என்பதை சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது.
தமிழக வரலாற்றில் மைல்கல்
ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்துக்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி விட்டது. சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர்.
இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
Post a Comment