தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசில் வழங்கும் வைபவம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
மஹஜன சம்பத சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒருகோடியே 82 இலட்சம் ரூபாவும் மெகாபவர் வெற்றிச் சீட்டிழுப்பில் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவும் அதிஷ்டம் கிடைத்துள்ளது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், அதிஸ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment