பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவரது நண்பரை கௌரவிக்க உள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் இம்ரான்கான் இதனை தெரிவித்துள்ளார்.
பிரியந்தவை வன்முறை கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்ற, அவருக்கு பாதுகாப்பளிக்க முயன்ற அவரது நண்பர் மலிக் அடானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலிற்கு தேசத்தின் சார்பில் நான் தலைவணங்குகின்றேன் என இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரியந்தவை உடல்ரீதியில் பாதுகாக்க முயன்றதன் மூலம் தனது உயிரையும் பணயம் வைத்த அடானைதம்ஹா சுஜாட் விருதினை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.