கவனம்.. இந்த பழக்கம் இருந்தா உடனே மாத்திடுங்க.. ஓமிக்ரான் பரவலாம்.. வல்லுனர்கள் தரும் அறிவுரை - Yarl Voice கவனம்.. இந்த பழக்கம் இருந்தா உடனே மாத்திடுங்க.. ஓமிக்ரான் பரவலாம்.. வல்லுனர்கள் தரும் அறிவுரை - Yarl Voice

கவனம்.. இந்த பழக்கம் இருந்தா உடனே மாத்திடுங்க.. ஓமிக்ரான் பரவலாம்.. வல்லுனர்கள் தரும் அறிவுரை



ஓமிக்ரான் பரவாமல் இருக்க மக்கள் தங்கள் மாஸ்க் அணியும் முறையில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமிக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 653 பேர் ஓமிக்ரானால் பாதிப்பு அடைந்துள்ளனர்.


இதுவரை 21 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் ஜீன் ஆராய்ச்சிக்கான CSIR Institute of Genomics and Integrative Biology எனப்படும் இந்திய அரசு அமைப்பின் விஞ்ஞானி வினோத் சக்கரியா மக்கள் மாஸ்க் அணியும் முறையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அறிவுரை
அவர்கள் அளித்துள்ள அறிவுரையில், இந்தியாவில் மக்கள் மாஸ்க் அணியும் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதில் முதல் விஷயம் மக்கள் மிகவும் இறுக்கமான மாஸ்க்கை அணிய வேண்டும். பெரிய மாஸ்க் அணிவதை விட முகத்தை இறுக்கமாக மூடும் மாஸ்க்கை அணிய வேண்டும். அப்போதுதான் முகத்தில் இடைவெளி இருக்காது. இதுதான் கொரோனா பரவ அதிக காரணம்.
மாஸ்க்
எந்த நேரத்தில், எந்த இடத்திலும் மாஸ்க்கை கொஞ்சம் கூட கீழே இறக்க கூடாது. இந்த பழக்கம் இருப்பவர்கள் அதை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். துணி மாஸ்க் அணிபவர்கள் உடனே அதை கைவிட வேண்டும். அது எந்த விதத்திலும் பலன் அளிக்காது.

 கொரோனா காற்று நீர் துளிகளில் பரவும்.
ஓமிக்ரான் மாஸ்க்
இது துணி மாஸ்க் வழியே பரவும். எனவே இதை தடுக்கும் வகையில் மக்கள் உடனே ffp2 வகை மாஸ்க் அணிய வேண்டும். இதை டைட்டாக அணிய வேண்டும். துணி மாஸ்க் அணிபவர்கள் அதற்கு மேல் ffp2 மாஸ்க் அணிவது கூடுதல் பாதுகாப்பை தரும். டைட்டாக ffp2 அணியும் போது நீங்கள் கொரோனா பாதித்த இன்னொரு ffp2 மாஸ்க் அணிந்த நபருக்கு அருகில் சென்றாலும் உங்களுக்கு கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு
என்ன மாஸ்க் அணிய வேண்டும்

1000ல் ஒன்று என்ற அளவில் மட்டுமே ffp2 மாஸ்க்கை டைட்டாக அணியும் போது கொரோனா ஏற்படும். ஆனால் சர்ஜிக்கல் மாஸ்க் அப்படி இல்லை. சர்ஜிக்கல் மாஸ்க்கும் பயன் தராது. 1000ல் 10 என்ற அளவில் சர்ஜிக்கல் மாஸ்க் காரணமாக கொரோனா ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ffp2 மாஸ்க் அணியும் பழக்கத்தை மக்கள் கொண்டு வர வேண்டும்
மாஸ்க் எப்படி அணிய வேண்டும்
என் 95 அல்லது ffp2 மாஸ்க் மக்களுக்கு சிறந்ததாக இருக்கும். ஓமிக்ரான் இப்போது இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு பரவுகிறது. இதற்கு காரணம் சரியாக மாஸ்க் அணியாததுதான். மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை. மாஸ்க்கை லூஸாக அணியும் பழக்கம் இருந்தால் ஓமிக்ரான் பரவும் ஆபத்து அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post