நடிகர் கமல்ஹாசன் எழுத்து இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2000ல் வெளியான படம் ஹேராம்.
இந்தப் படத்தில் ஷாருக்கான்இ ராணி முகர்ஜி உள்ளிட்டவர்களும் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த இந்தப் படத்தில் தான் நடித்தது குறித்தும் கமல் குறித்து படத்தின் நாயகி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்
.உலக நாயகன் கமல்ஹாசன் எழுதிஇ இயக்கி மற்றும் தயாரித்து வெளியிட்ட படம் ஹேராம். சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெளியானது. படத்தில் கமலுக்கு ஜோடியாகியிருந்தார் ராணி முகர்ஜி. ஷாருக்கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் அந்த காலகட்டத்தில் படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்திய -பாகிஸ்தான் பிரிவினையின்போது தனது மனைவியை பறிகொடுக்கும் நபராக படத்தில் கமல் நடித்திருந்தார்.
இதற்கு காந்தியே காரணம் என்று அவர் மூளை சலவை செய்யப்படுவதாகவும் அவரை கொல்ல முடிவெடுத்து அதற்காக செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளும் என கதை நகர்கிறது. இறுதியில் காந்தியின் அகிம்சையை உள்வாங்கி வாழ்க்கையை மாற்றிக் கொள்வதாக கதை முடிகிறது.
படத்தில் சாகேத் ராம் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பால் படத்தை தூக்கி பிடித்திருப்பார் கமல். இன்றளவும் விமர்சகர்களின் விருப்பத்திற்குரிய படமாக ஹேராம் அமைந்துள்ளது. படத்தில் அம்ஜத்கானாக நடித்திருந்த ஷாருக்கின் நடிப்பும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
படத்தில் நாயகியாக நடித்திருந்த ராணி முகர்ஜிஇ இவரது இறப்பிற்கு பின்பே திரைக்கதையில் சிறப்பான ஓட்டம் காணப்படும். இந்த வகையில் இவரது கேரக்டர் மிகவும் சிறப்பானதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 20 ஆண்டுகளை கடந்தும் இந்தப் படம் குறித்து பகிர்ந்து கொள்வதற்கு அவருக்கு அதிகமான விஷயங்கள் காணப்படுகிறது.
கமல்ஹாசனுடன் தான் நடித்தது தன்னுடைய பாக்கியம் என்று அந்த பேட்டியில் ராணி முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். மேலும் கமலிடம் இணைந்து பணியாற்றியபின்பே தனக்கு டெடிகேஷனுடன் பணியாற்றுவது குறித்த உத்வேகம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூட்டிங்கின்போது தன்னை மேக்கப்பை கலைத்துவிட்டு வரும்படி கமல் கூறியதாகவும்இ தான் சந்தேகத்துடன் முகத்தை கழுவிவிட்டுஇ சிறிய அளவில் மேக்கப் போட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் முழுமையாக மேக்கப்பை கலைத்துவிட்டு வந்தபின்பே தன்னை அவர் சூட்டிங்கில் அனுமதித்ததாகவும் ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேக்கப்பை கலைக்க சொன்ன முதல் இயக்குநர் கமல்ஹாசன் என்றும் அவர் கூறினார். கமலுடன் இணைந்து பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் என்றும் அவர் சிறப்பான வகையில் நேரத்தை கடைப்பிடிப்பார் என்றும் ராணி மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்
6 மணிக்கு சூட்டிங்கை துவக்கினால் 5 மணிக்கு சூட்டிங்கை பேக் அப் செய்துவிடுவார் என்றும் ராணி முகர்ஜி நினைவு கூர்ந்துள்ளார். அவருடன் நடிக்கும்போது சினிமா குறித்து அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் சூட்டிங்கின்போது ஹீல்ஸ் செருப்புகளை அணிந்திருந்ததாகவும் ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். உயரத்தை ஹீல்ஸ் செருப்புகளால் இல்லாமல் நம்முடைய நடிப்பு திறமையால் காட்ட வேண்டும் என்று கமல் கூறியதையும் ராணி முகர்ஜி மேலும் கூறினார்
Post a Comment