தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித் துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் டிசம்பர் இறுதி வரை அமுலில் இருக்கும் என நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித் தார்.
இந்தச் சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரு திருமணத் தில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு வெளிப்புற நிகழ்வில் 250 பேர் கலந்து கொள்ளலாம்.
திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
மேலும், எழுபத்தைந்து சதவீத கொள்ளளவுக்கமைய திரையரங்குகள் மக்களை அழைக்கலாம்.
ஓர் இறுதிச் சடங்கில் ஒரே நேரத்தில் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், மேலும் கொவிட் அல்லாத மரணத்தை 24 மணி நேரத்துக்குள் தகனம்/அடக்கம் செய்ய வேண்டும்.
மேலும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை அருகிலுள்ள மருத்துவ அலுவலர் அலுவலகத்திலோ அல்லது அருகிலுள்ள மருத்துவ மனையிலோ பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
பண்டிகைக் காலம் விரைவில் நெருங்கி வருவதால், அன்றாட நடவடிக்கைகளின் போது கொவிட் வைரஸிலிருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
Post a Comment