கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
”உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களின் செயற்பாடுகளில் பிழைகளை கண்டு இருக்கலாம் அல்லது அவர்கள் நன்றாக செயற்படுகிறார்கள் என மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவற்றை உடைக்க வேண்டும் ஆயின் அவர்களை தோற்கடிக்க வேண்டும்.
கட்சிகளின் சுயநலத்தின் அடிப்படையில் தான் அவை தோற்கடிக்கப்படுகிறது. தங்களின் கட்சி சார்ந்த தேவைகளுக்காக தோற்கடிக்கின்றார்கள்.
உள்ளூராட்சி சபைகளின் காலம் வருகின்ற ஏப்ரல் மாதமளவில் முடிவடையவுள்ள நிலையில், அதனை 6 மாத காலப்பகுதிக்கோ , ஒரு வருட கால பகுதிக்கோ அந்த சபைகளை நீடிக்க கூடும் என நிச்சயமாக நம்புகிறேன். ஏனெனில் இன்றைய கள சூழலில் அரசாங்கம் புதிய தேர்தலை நடத்தும் நிலைக்கு போக மாட்டாது.
ஆகவே அவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபைகளை தோற்கடித்து ஆங்காங்கு ஆணையாளரின் கீழ் சபைகள் கொண்டுவரப்படுமாயின் , அதைப்போல ஒரு மோசமான நிலை இருக்காது. எனவே மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இருப்பது.
வடக்கு மாகாண சபை இல்லாததால் , ஆளுநர்கள் வந்து என்ன செய்கிறார்கள் என கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு இந்த கதி ஏற்படுமாயின் , ஒட்டுமொத்தமாக அரசாங்கம் தான் விரும்பியதை செய்யும். அதற்கு நாங்கள் களம் அமைத்து கொடுத்தவர்களாக இருப்போம். ஆகவே இதொரு சரியான நடவடிக்கை இல்லை” என தெரிவித்தார்
Post a Comment