இன்னும் சில நாட்களில் அரசு வெடித்து விடும் - விதுர விக்கிரமநாயக்க - Yarl Voice இன்னும் சில நாட்களில் அரசு வெடித்து விடும் - விதுர விக்கிரமநாயக்க - Yarl Voice

இன்னும் சில நாட்களில் அரசு வெடித்து விடும் - விதுர விக்கிரமநாயக்க



அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் புதிய குழுவொன்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையை எதிர்பார்த்து 2019 இல் மக்கள் மாற்றத்தை மேற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post