மணிவண்ணனின் தூய நகர திட்ட குளப் புனரமைப்பை கூட்டமைப்பின் ஈசன் ஆரம்பித்து வைத்தார்! - Yarl Voice மணிவண்ணனின் தூய நகர திட்ட குளப் புனரமைப்பை கூட்டமைப்பின் ஈசன் ஆரம்பித்து வைத்தார்! - Yarl Voice

மணிவண்ணனின் தூய நகர திட்ட குளப் புனரமைப்பை கூட்டமைப்பின் ஈசன் ஆரம்பித்து வைத்தார்!




யாழ். ஈச்சமோட்டை மறவர்குள  புனரமைப்பு பணிகள் இன்றைய  தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது .

இன்று காலை 10 மணியளவில் யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர். மாநகர சபை உத்தியோகத்தர்கள்,  அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post