காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை மூடிவிட்டு அதானி அம்பானி இலங்கை அபிவிருத்தி செய்கிறார்களாம்... யாழில் கேவிபி பிமல் ரத்நாயக்க
நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என இந்தியாவின் அம்பானி அதானி நிறுவனங்களுக்கு நாட்டை வழங்கிவரும் அரசாங்கம் யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் உள்ள சீமெந்து தொழிற்சாலையை அப்படியே மூடி உள்ளது என ஜே வி பியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தின் 16 வருட பிரதமர் ஆட்சியில் 12 ஆண்டுகள் ராஜபக்ச குடும்பமே பிரதமராக இருந்துள்ளனர். இதன்போது நாட்டின் அபிவிருத்தி, கிராம விருத்தி வீழ்ச்சியடைந்துள்ளன.
. முஸ்ஸிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீனின் கட்சி எதிர்க்கட்சி போல இருந்துகொண்டு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெறுகிறார்கள். மைத்திரிபால சிறிசேனவும் அப்படித்தான். அரசை விமர்சித்து கொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குகிறார்.
இவர்கள் ராஜபக்சவின் பின்னால் செல்கிறார்கள். இலங்கையில் உர பிரச்சனை இருக்கிறது மன்னார் பகுதியில் கீரி சம்பா அதிகம் விளையும் பிரதேசமாகும்.
அங்கு யூரியா இல்லை, ஆனால் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி எப்படியோ சிலர் அதை பெறுகிறார்கள். உரம் இல்லாமையால் நெற் பயிர்கள் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கின்றன
விவசாயிகள் வயலில் உழுது பண்படுத்தி தருமாறு கேட்கவில்லை. அவர்கள் தாமாகவே அனைத்தையும் செய்து உரத்தை கடைகளில் பெற்று நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுகின்றனர்.
ஜனவரி மாதத்தில் உரத்தை கொண்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
மன்னாரில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்காக 2000 ஏக்கர் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை அப்படியே இருக்கிறது.
இந்தியாவை அபிவிருத்தி செய்ய முடியாத அதானி, அம்பானி குடும்பம் இலங்கை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும். இலங்கையில் பிடிபடும் இந்தியா டேலர்களை விடுதலை செய்கிறார்கள்.
மாலைதீவில் பிடிபடும் இலங்கை டோர்களை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுவிக்க முடியுமா?
இந்திய டொலர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. அதுபோல இந்திய டோலர்கள பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா? வடக்கு மக்களுக்கென்று புகையிரதப்பாதை விமான நிலையம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் வாழ்வதற்கான காணிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment