மனித வாழ்க்கையினை எளிதாக்கும் மதங்கள் மற்றும் உரிமைகளின் உலகளாவிய அம்சங்களை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுங்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
மனிதர்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாசாரங்கள் ஆகியவற்றின் மூலம் தெற்காசிய நாடுகள் வளம் பெற்றுள்ளன.
இந்த நாடுகளில் அடிப்படை சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பல சட்டங்கள் மற்றும் சட்டப் பாதுகாப்புகளும் உள்ளன
மத மரபுகளின் ஆதரவு, மனித உரிமைகளுக்கான அடிப்படையை வழங்குவது மட்டுமல்லாமல், மனித உரிமைகளின் தேவைகள், பல்வேறு மத மற்றும் கலாசார மரபுகளின் தார்மீக மற்றும் ஆன்மீக மொழிக்கு பரிமாற்றுவதற்கு காரணமாகின்றது..
அதிகமான மக்கள் இந்த உரிமைகளை தங்கள் பாரம்பரியமாகக் கோருவதற்கு உதவுவதோடு மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் தற்போதைய உலகளாவிய அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆசியாவில் உள்ள மதங்களின் புனித நூல்களில் உள்ள பொதுவான அம்சங்கள் மற்றும் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் கட்டியெழுப்பப்படும்.
மனித ஆளுமை மற்றும் தனிநபர் ஆளுமை, கண்ணியம் மற்றும் சுய மதிப்பு, அத்துடன் மற்றும் உடல், உளத் திறன்களின் உணர்வை வளர்த்துக் கொள்ளுதல்.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் கலாசாரத் தனித்துவம், மொழி மற்றும் மதிப்புகளுக்கு மரியாதை அளித்தல்.
சுதந்திரமான சமுதாயத்தில் மக்கள் திறம்பட பங்கேற்க உதவுதல் மற்றும்
அனைத்துக் குழுக்களிடையேயும் புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் நட்பை ஊக்குவித்தல் மற்றும் அமைதியைப் பேணுதல் ஆதி அம்சங்களைக் கொண்ட வடக்கை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முன்வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment