அடுத்த வாரம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும்அமுனுகம இதனை உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பில் புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலநிபந்தனைகளின் அடிப்படையிலேயே விலை மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம் பொதுமக்களின் நிலைமையை கருத்தில்கொண்டு சிறிய அதிகரிப்பையேமேற்கொள்ளவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment