பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா
பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு சென்று மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி விடுமுறைக்கு கண்டி சென்று திரும்பியிருந்த நிலையில் இன்று தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment