கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் மாணவிகள் மூவருக்கு கொரோனா - Yarl Voice கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் மாணவிகள் மூவருக்கு கொரோனா - Yarl Voice

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் மாணவிகள் மூவருக்கு கொரோனா



கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் உள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர்பராமரப்பு இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் மாணவிகள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட பீசிஆர் மாதிரிகளின் ஊடாக குறித்த மாணவிகளுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருத்திரபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவிகள் மூவரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவிகளுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த மாணவிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவிகளுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளுமாறும் சுகாதாரத் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post