தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் அப்பர் சுவாமிகள் அமர்வு முதலாவதாக ஆரம்பமானது.
முதலாம் அமர்வில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் நிறுவுனர் தென்னவன் பார்த்தீபன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் உரையும் நவரத்தினம் பரந்தாமன் குழுவினரின் திருமுறை விண்ணப்பமும் மதுரையைச் சேர்ந்த சொ.சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் தொண்டு நெறி எனும் தலைப்பிலான சிறப்புரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறவன்புலவு சச்சிதானந்தன், ஆன்மீக தலைவர்கள் மத பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மார்கழிப் பெருவிழா இன்றும் நாளையும் நான்கு அமர்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment