இந்தியாவிலும், கடந்த பல மாதங்களாக, கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அரசு மிகவும் நடவடிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் முகாம்களும் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டி, மக்களும் தகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, தற்போது ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்று, மீண்டும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.
ஒமைக்ரான் தொற்று
இதுவரை, சுமார் 100 நாடுகளுக்கு மேல், இந்த ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், தடுப்பூசியின் அத்தியாவசியத்தை பல மாநில அரசுகள் இன்னும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், நலவாழ்வுத் துறையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர், ஒட்டகத்தின் மீது சென்று, தடுப்பூசி போட்டு வருகிறார்.
ஒட்டகத்தில் பயணம்
ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனப் பகுதியில் இருக்கும் மக்களில், தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து, ஒட்டகத்திலேயே சென்று, அவர்களுக்கு தடுப்பூசி போடுகிறார் ஒரு பெண். இதுகுறித்த புகைப்படத்தினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பகிர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, 'கிராமங்கள் தொடங்கி மலைப்பிரதேசங்கள் முதல் பாலைவனங்கள் வரை, கொரோனா தொற்றை வீழ்த்த, இந்தியாவின் தொடர்ந்து போராடி வருகிறது. இதனைச் செய்த முன்களப் பணியாளர்களுக்கு வணக்கமும், நன்றியும்' என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment