இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாதமை குறித்து இந்திய அரசாங்கம் நிதியமைச்சர் பசில்ராஜபக்சவிடம் கரிசனை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட பல உடன்படிக்கைகளை இலங்கை நிறைவேற்ற தவறியுள்ளது எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போதே இந்தியா தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் செய்து கொள்ளப்பட்ட மூன்று உடன்படிக்கைகளை இலங்கை நிறைவேற்ற தவறியுள்ளது என இந்திய சுட்டிக்காட்டியுள்ளது.